twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "பொங்குறோம் திங்கிறோம் " நகைச்சுவை குக்கிங் ஷோ... ரோபோசங்கர் ரகளையுடன் !

    |

    சென்னை: குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன.

    அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குரேஷி இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "பொங்குறோம் திங்கிறோம்" .

    முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.ரோபோ சங்கர் இருப்பதால் பல விதமான புது காமெடி யுக்திகளை பயன்படுத்த திட்டம் தீட்டி உள்ளனர்

    யுவன் சங்கர் ராஜா இசையில் காளிதாஸ் ஜெயராம்! யுவன் சங்கர் ராஜா இசையில் காளிதாஸ் ஜெயராம்!

    சமையல் கலை நிபுணர்

    சமையல் கலை நிபுணர்

    இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது, மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள்.இந்த 'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு கிரேஸ் கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

    விதவிதமான

    விதவிதமான

    இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம் சிவா, சாய், ரஞ்சித், இந்திரஜா ரோபோசங்கர், சாய் போட்டியளர்களாக பங்குபெறுகின்றனர்.
    நகைச்சுவையோடு , விதவிதமான உணவுவகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது 'பொங்குறோம் திங்கிறோம்'.

     மிகவும் வைரல்

    மிகவும் வைரல்

    இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ சமூக வலை தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது .வித விதமாக சாப்பிட ஆசைப்படும் பலருக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு செம்ம ட்ரீட் என மலேசிய மக்கள் மிகவும் நம்புகின்றனர் .

    அசைவம் சைவம்

    அசைவம் சைவம்

    பொதுவாக குண்டாக இருப்பவர்கள் ஒல்லி ஆவதற்கும் , ஒல்லியாக இருபவர்கள் குண்டாக மாறுவதற்க்கும் நிறைய ஸ்வாரஸ்யமான டிப்ஸ் இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் என்று சொல்ல பட்டு வருகிறது.சைவம் ஒரு பக்கம் அசைவம் ஒரு பக்கம் என்று எல்லாம் கலந்த ஒரு நிகழ்ச்சியாக தான் இருக்கும் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பிளான் செய்கின்றனர் . அதிகமாக அசைவ உணவுகள் தான் பலரையும் சுண்டி இழுக்கும் என்று பல எபிஸோட்ஸ் அசைவம் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருகின்றனர் .விரைவில் ஆன் லைன் மூலம் அனைவரும் காணலாம் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது .

    English summary
    Rombo Shankar is all set to compere a comedy cooking show for a Malaysian media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X