டியர் vs ரோமியோ.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் முந்தியது யார்?.. இதோ வசூல் நிலவரம்!
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் முதல் கோலிவுட் வரை நேற்று பல படங்கள் வெளியாகின. மலையாளத்தில் வெளியான ஆவேஷம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல பாலிவுட்டில் வெளியான மைதான் திரைப்படமும் வரவேற்பை பெற்றுள்ளது. படே மியான் சோட்டே மியான் ஆக்ஷன் காட்சிகள் நல்லா இருக்கு என்றும் கதை சொதப்பல் தான் என கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.
தமிழில் இந்த ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு படங்கள் வெளியாகின. விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ மற்றும் ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டியர். இந்த இரண்டு படங்களில் முதல் நாள் வசூலில் டியர் படத்தை விட ரோமியோ படம் தான் அதிக வசூல் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரமாவது தமிழ் சினிமாவுக்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் படம் ரிலீஸ் ஆகுமா? என எதிர்பார்த்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு வாய்ப்பே இல்லை ராஜா என சொல்வது போலத்தான் இரண்டு படங்களும் வெளியாகி உள்ளன.
டியர்: ரெபல், கள்வன் படங்களை தொடர்ந்து இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் நடித்த டியர் படம் வெளியாகி இருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் ஆக திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து தனது படங்களை கடந்த 3 வாரங்களாக வெளியிட்டு ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விட்டு நடித்துள்ள டியர் படத்தை பார்க்க தியேட்டரில் முதல் நாளில் பெரிதாக கூட்டமே இல்லை.
ரோமியோ: விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ரொமான்டிக் காமெடி படமாக வெளியாகியிருக்கும் ரோமியோ படத்தில் சில குறைகள் இருந்தாலும், ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைத்து அந்த படம் வெளியே அனுப்புகிறது. ஆனால், படத்தின் கதை பல நூறு படங்களில் பார்த்த கதை என்பதால் பெரிதாக பிக்கப் ஆகுமா? என்பது சந்தேகம் தான்.
டியர் வசூல்: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் டியர் படத்தின் முதல் நாள் வசூல் 50 லட்சத்துக்கும் குறைவு தான் என அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. நிச்சயமாக இந்த படத்துக்கெல்லாம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட மாட்டார்கள் என்பது தனிக்கதை. ஓடிடி உரிமம் விற்பனையாவதை வைத்து தான் ஜி.வி. பிரகாஷ் படங்களே வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றன என அவரே மேடையில் கூறியுள்ளார். அதனால், தியேட்டர் வசூலை டார்கெட் செய்ய வாய்ப்பில்லை.
ரோமியோ வசூல்: விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் ரோமியோ திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூலுடன் நல்ல துவக்கத்தை கொடுத்திருக்கிறது. மலையாள படங்களே இப்போ முதல் நாளில் 7 முதல் 10 கோடி வசூலை சிறு பட்ஜெட் படங்களே அள்ளி வரும் நிலையில், ரோமியோ வசூல் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறுமா? என்பது டவுட்டு தான். ஆனால், விஜய் ஆண்டனிக்கு வெற்றிப் படமாக மாற வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கிறது. இந்த வார முடிவில் அது தெளிவாக தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











