ரோமியோ ஜூலியட் ஜோடிக்கு கும்பகோணத்தில் 'முக்கிய வேலை'!!
ஜெயம் ரவியும் ஹன்சிகா மேத்வானியும் இணைந்து நடிக்கும் படம் ரோமியோ ஜூலியட். இந்தப் படத்தின் குழுவினர் இப்போது கும்பகோணத்தில் முகாமிட்டுள்ளனர்.
நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
அதோடு எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லக்ஷ்மன் இயக்கும் ரோமியோ ஜூலியட் படத்திலும் ஜெயம்ரவி நடிக்கிறார்.
இதில் ஹன்சிகா மேத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.
இதனை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயம் ரவி – ஹன்சிகா
ஜெயம் ரவி-ஹன்சிகா ஜோடியுடன் விடிவி கணேஷ், பூனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

காதலும் ஈகோவும்
இந்திய கலாச்சாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தில் வாழும் ஹீரோயினுக்கும் இடையில் வரும் காதலும், ஈகோவும்தான் கதை.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு
கும்பகோணத்தில் ஏற்கெனவே படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பையும் கும்பகோணத்திலேயே தொடங்கியிருக்கிறது. செப்டம்பர் 26-ந் தேதி வரை கும்பகோணத்திலேயே படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.

படம் ரிலீஸ் எப்போ?
இதைத் தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











