பொண்டாட்டி கால்ல பட்டுனு விழுந்துடுவேன்.. விஜய் ஆண்டனியின் கலகல பேட்டி!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத ரொமாண்டிக் காமெடி ஜானர் திரைப்படமான ரோமியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தனது மனைவி குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ரோமியோ. இதில்,விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

சர்ச்சை பேச்சு: முன்னதாக வெளியான ரோமியோ படத்தின் போஸ்டரில் முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் அமர்ந்து இருந்தனர். இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி, ஆண் குடிக்கிறார் என்றால் பெண்ணும் குடிக்கலாம். ஆண், பெண் இருவரும் சமம்தானே என்றார். மேலும், ஜீஸஸ் காலத்தில் இருந்தே குடி என்பது வெவ்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது எசி சர்ச்சையில் சிக்கினார்.
மன்னிப்பு அறிக்கை: இதற்கு, தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தது. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுப்படுத்தும் விதமாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திவிட்டார் என்றும், இதற்காக நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் கிறிஸ்தவ அமைப்பு அறிக்கை வெளியிட்டது. இதற்கு விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரினார்.
அதுக்காக கல்யாணம் பண்ணோம்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜய் ஆண்டனி, திருமண வாழ்க்கை குறித்தும் மனைவி குறித்தும் பேசினார். அதில், என் மனைவி வாழ்க்கையில் எனக்கு முதுகெலும்பாக இருக்கிறாள். ஆனால், அவளின் கருத்தும் என்னுடைய கருத்தும் வேறு வேறாகத்தான் இருக்கும். என்னை என் மனைவி புரிந்து கொள்ள வேண்டும், நான் அவளை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தால், என் வாழ்க்கையை நான் எப்போது வாழ்வது. இரண்டு பேர் திருமணம் செய்து கொள்வது ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதற்கு இல்லை. பல விஷயங்கள் நமக்கு தானாகவே தெரியும் இதனால், இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
காலில் விழுந்து விடுவேன்: அதே போல நான் பெரிய ஒழுங்கு என்று சொல்லவில்லை, வீட்டில் மனைவியை எதாவது கோவமா திட்டிவிட்டால், டக்குனு காலில் விழுந்துவிடுவேன். வீட்டில் வேலை செய்யும் பணியாட்களை அழைத்து என மனைவி தான் பெரிய ஆள் நான் இல்லை என்று அவங்களை நிற்கவைத்து காலில் விழுந்துவிடுவேன். இதனால், என்ன இருக்கு என் மனைவி தானே, அவங்க காலில் விழுவதில் தப்பு இல்லையே. அதே போல என் மனைவிக்கு இதுவரை நான் சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி கொடுத்தது இல்லை, இதுவரை அவர்களை சர்ப்ரைஸ் பண்ணது இல்லை என்று விஜய் ஆண்டனி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











