அஜித்தின் குட் பேட் அக்லி.. எந்த நிறுவனம் எவ்வளவுக்கு வாங்கியிருக்கிறது தெரியுமா?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்திருக்கின்றன. ஏப்ரல் 10ஆம் தேதி இந்தப் படமானது உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அஜித்தின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி ஏகே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது துணிவு. அடுத்ததாக அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆவல் இருக்கிறது.

பிப்ரவரியில் ரிலீஸ்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்கள் நடந்து ஒருவழியாக ரிலீஸுக்கு தயாரானது. அதன்படி முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் பிப்ரவரி 6ஆம் தேதி தள்ளிப்போயிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்புதான் படக்குழு ட்ரெய்லர் வெளியிடும்போது குறிப்பிட்டிருந்தது. படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஆதிக் இந்தப் படத்தில் அஜித்தை எவ்வாறு ட்ரீட் செய்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு: படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான புகைப்படங்கள் எல்லாம் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தின. அஜித்தை அடையாளமே தெரியாமல் மாற்றியிருக்கிறார் ஆதிக். அதிலும் க்ளீன் ஷேவ் செய்துகொண்டு கேஷுவல் ட்ரெஸ்ஸில் அஜித் நின்ற புகைப்படத்தை பார்த்த ஏகே ரசிகர்கள், அட அமர்க்களம் காலத்து அஜித்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன். கண்டிப்பாக படத்தில் சம்பவம் இருப்பது உறுதி என்று கொண்டாடிவருகின்றனர்.
பட ரிலீஸ்: படம் முதலில் பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்நிலையில் குட் பேட் அக்லி பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ரிலீஸ் செய்யும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் 70 கோடி ரூபாய்வரை கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் நேசிப்பாயா, கிளாடியேட்டர் 2 உள்ளிட்ட படங்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











