காலமானார், ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன் -ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா படத்தில் நடித்தவர்

By

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன் நியூயார்க்கில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன். இவர், வேர் இஸ் போப்பா, ஸ்லாட்டர் ஹவுஸ்-5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உட்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிப்புக்காக எம்மி மற்றும் டோனி விருதுகளை பெற்றுள்ள பாப் லீப்மேன், நியூயார்க்கில் வசித்து வந்தார். சினிமா தவிர, பசிபிக் ஸ்டேஷன், லா அண்ட் ஆர்டர், ஹோல்டிங் த பேபி உட்பட ஏராளமான டி.வி.தொடர்களிலும் நடித்துள்ளார்.

Ron Leibman, Actor in Angels in America Dies at 82

கடந்த சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்த இவர், நேற்று திடீரென்று காலமானார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பாப் லீப்மேனின் முதல் மனைவி, நடிகை லிண்டா லாவின். இவரை விவாகரத்து செய்தபின், நடிகை ஜெசிக்கா வால்டரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

பாப் லீப்மேன் மறைவுக்கு ஏராளமான ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X