திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்கி, நடிக்கும் ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’
சென்னை: சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்குவது சினிமாத்துறையினரின் வழக்கம் தான். அந்த வகையில் சமீப காலமாக பரபரப்பாக மீடியாக்களில் வலம் வரும் கிரிக்கெட் சூதாட்டத்தைக் குறித்து ஒரு படம் தயாராகிறது.
'கிரிக்கெட் ஸ்கேண்டல்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தை . திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்கி, முக்கிய வேடத்தில் நடிக்க இருகிறார்.
'கிரிக்கெட் ஸ்கேண்டல்' குறித்து திருநங்கை ரோஸ் கூறியதாவது....

கிரிக்கெட் சூதாட்டம் தான் மையக்கரு...
ஒரு வருடத்துக்கு முன்பே இந்த கதை தயாரிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடக்கும் மேட்ச் பெட்டிங்கால் என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கிரிக்கெட் அழிந்துவிடுமா என்ற விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.

கிளப் டான்ஸராக ரோஸ்...
புதுமுகம் கிஷன் ராமசந்திரன் ஹீரோ. கிளப் டேன்சர் வேடத்தில் நான் நடிப்பதுடன் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறேன். செந்தில்குமார், பார்த்திபன் என பலர் நடிக்கின்றனர். அகு.அஜ்மல் ஒளிப்பதிவு. தீபன் இசை. கிருதியா, கானா பாலா பாடல்கள். ஏ.செந்தில்குமார் தயாரிக்கிறார்.

மும்மொழிகளில் தயாராகிறது...
ஆங்கிலத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் வெளியாகிறது' எனத் தெரிவித்தார்.

ஸ்ரீசாந்த் கேரக்டர்....
ஒரு வருஷத்துக்கு முன்னாடி தயார் செய்யப்பட்ட கதைனாலும், ஸ்ரீசாந்த் கேரக்டர கட்டாயம் வச்சிருப்பீக்களே ரோஸ்?


Click it and Unblock the Notifications











