இஸ்லாமியரை காதலிப்பதால் ரித்திக் ரோஷன் சகோதரியை அடிக்கிறார்கள்: பரபரப்பு புகார்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா ஒரு இஸ்லாமியரை காதலிப்பதால் அவரை குடும்பத்தாரே அடித்து துன்புறுத்துவதாக நடிகை கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை கங்கனா ரனாவத்துக்கும் இடையே பல காலமாக மோதல் உள்ளது. ரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கங்கனா புகார் தெரிவித்தார். அதை ரித்திக் மறுத்தார்.

இந்நிலையில் ரித்திக் ரோஷனின் சகோதரி சுனைனா கங்கனாவை ஆதரிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து கங்கனாவின் அக்கா ரங்கோலி ட்விட்டரில் பெரிய குண்டையே தூக்கிப் போட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

சுனைனா ரோஷன்

சுனைனா ரோஷன்

சுனைனா ரோஷன் டெல்லியை சேர்ந்த முஸ்லீம் ஒருவரை காதலிப்பதால் அவரை அவரின் குடும்பத்தார் அடித்து துன்புறுத்துகிறார்கள். இதையடுத்து சுனைனா கங்கனாவிடம் உதவி கேட்கிறார். கடந்த வாரம் ஒரு பெண் போலீசை வரவழைத்து அவரை அறைய வைத்துள்ளனர், அவரின் தந்தையும் அடித்துள்ளார், அவரை சிறையில் அடைக்க சகோதரர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

குடும்பம்

குடும்பம்

குடும்பத்தார் சுனைனாவை காயப்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன். சுனைனா கங்கனாவுக்கு அடிக்கடி போன் செய்து உதவி கேட்டு அழுகிறார். அவருக்கு எப்படி உதவி செய்வது என்று கங்கனாவுக்கு தெரியவில்லை. அதனால் தான் இதை வெளிப்படையாக தெரியப்படுத்த விரும்பினோம். தற்போது கங்கனா சுனைனாவின் நம்பரை பிளாக் செய்துவிட்டார். இருப்பினும் அவரின் பாதுகாப்பு குறித்து பயமாக உள்ளது. பிடித்தவரை விரும்பும் உரிமை சுனைனாவுக்கு உள்ளது. இது ரோஷன்களை அஞ்ச வைக்கும் என்று நம்புகிறோம்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

சுனைனா அடிக்கடி போன் செய்ததால் கங்கனா மனஉளைச்சலுக்கு ஆளானார். ரோஷன்கள் கங்கனாவை காயப்படுத்தக் கூடியவர்கள் தான். ஆனால் இம்முறை நான் எச்சரிக்கையுடன் உள்ளேன். நானே சுனைனாவிடம் பேசினேன். அவர் அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை பதிவு செய்து பத்திரமாக வைத்துள்ளேன். சுனைனா பிரச்சனையில் உள்ளார்.

ரோஷன்கள்

ரோஷன்கள்

சுனைனா கங்கனாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவரின் தந்தை மற்றும் சகோதரர் கங்கனாவை எதுவும் செய்துவிடக் கூடாது. கங்கனாவுக்கு நான் இருக்கிறேன் இருப்பினும் சுனைனாவுக்கு உதவி செய்வது என் கடமை. சுனைனாவின் கோரிக்கையை ஏற்று தான் நான் இதை எல்லாம் தெரிவிக்கிறேன். தாங்கள் கண்காணிக்ப்படுகிறோம் என்பதை ரோஷன்கள் உணர வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X