நள்ளிரவில் தயாரிப்பாளரை வீடு புகுந்து தாக்கிய ஜோதிகா பட இயக்குநர்

By Siva

கொச்சி: ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை எடுத்த இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை எடுத்த இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனின் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

எர்ணாகுளத்தில் உள்ள ஆல்வினின் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்று ரோஷன் தாக்கினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஆல்வி ஆண்டனி ரோஷன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார்

புகார்

ஆல்வின் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ரோஷன் மற்றும் பலர் நள்ளிரவில் எங்கள் வீட்டிற்குள் புகுந்து எங்களையும், எங்களை பார்க்க வந்த டாக்டரையும் தாக்கினார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தையை கூட மிரட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ரோஷன்

ரோஷன்

ஆல்வின் சொல்வதில் உண்மை இல்லை என்கிறார் ரோஷன். இது குறித்து அவர் கூறியதாவது, தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகன் ஆல்வின் ஜான் மும்பை போலீஸ் மற்றும் ஹவ் ஓல்டு ஆர் யூ ஆகிய படங்களில் என்னிடம் உதவியாளராக பணியாற்றினார். அப்பொழுது அவர் போதைப் பொருள் பயன்படுத்தினார். கண்டித்தும் கேட்காததால் படக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார் என்றார் ரோஷன்.

நண்பர்

நண்பர்

ஆல்வின் ஜானை நான் படக்குழுவில் இருந்து நீக்கியதால் அவர் என்னை பற்றி அவதூறு பரப்பி வந்தார். இது குறித்து கேட்டதற்கு தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி என்னையும், என் நண்பர் நவாஸையும் தாக்கினார் என்று ரோஷன் கூறினார். இருப்பினும் ரோஷன், நவாஸ் ஆகியோர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் ஆல்வின் மீது ரோஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம்

ரோஷன் ஆண்ட்ரூஸ் ஆல்வின் ஆண்டனியின் குடும்பத்தை தாக்கியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரோஷன் ஆண்ட்ரூஸை வைத்து படம் எடுக்க விரும்புபவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனுமதி கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X