‘ரவுடி பேபி’யின் புதிய சாதனை.. சாய்பல்லவிக்கு தேங்க்ஸோடு வாழ்த்தும் சொன்ன தனுஷ்.. ஏன் தெரியுமா?
மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
Recommended Video

சென்னை: ரவுடி பேபி பாடல் வீடியோவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியானது 'மாரி 2'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பாடகி தீக்ஷிதா வெங்கடேசன் உடன் தனுஷ் எழுதிப் பாடிய ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.

பாடல் வீடியோ:
இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக யூடியூப்பில் வெளியிட்டது.தொடக்கம் முதலே இப்பாடல் வீடியோவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே நாளில் ஏழு மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவைப் பார்த்தனர்.

பெருமை:
யூடியூபில் வெளிவந்த விடியோ பாடல்கள் தரவரிசையில் `ரவுடிபேபி' பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்தது. இதன் மூலம் சர்வதேச இசைப்பட்டியலில் இடம் பிடித்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையும் இதற்கு கிடைத்தது.

முதலிடம்:
இந்நிலையில் தற்போது இப்பாடலை 200 மில்லியன் மக்கள் அதாவது, சுமார் 20 கோடி பேர் கண்டுரசித்துள்ளனர். பாடல் வெளியிடப்பட்டு 42 நாட்களில் இந்த சாதனையை ரவுடி பேபி படைத்துள்ளது. இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ பட்டியலில் ‘ரவுடி பேபி' பாடல் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நன்றி:
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் தனுஷ் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இப்பாடல் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கூடவே தனது முந்தைய சாதனையை தானே முறியடித்திருப்பதாக சாய் பல்லவிக்கு அவர் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

வச்சிந்தே பாடல்:
சாய் பல்லவிக்கு தனுஷ் வாழ்த்துக்கள் கூறக் காரணம், அவரது பிடா படத்தின் வச்சிந்தே பாடல் இதற்கு முன்னர் யூடியூபில் முதலிடத்தில் இருந்தது. தற்போது அப்பாடலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி ரவுடி பேபி முதலிடத்திற்கு சென்றுள்ளது.

ரௌடி பேபி:
முன்னதாக தனுஷ் - அனிருத் காம்போவின் `Why this kolaveri di?' மேக்கிங் வீடியோ பில் போர்டில் இடம்பெற்று இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி பாடல் 175 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த சாதனையை ரவுடி பேபி முறியடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











