ரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby
சென்னை: மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 2 வாரத்தில் 100 மில்லியன்(10 கோடி) முறை பார்க்கப்பட்டுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அதிலும் குறிப்பாக தனுஷ் எழுதி, பாடிய ரவுடி பேபி பாடல் குட்டீஸ் முதல் இளசுகள் வரை பலருக்கும் பிடித்திருந்தது. தனுஷுடன் சேர்ந்து பாடகி தீ பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் ரவுடி பேபி பாடல் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரவுடி பேபி பாடல் 2 வாரத்தில் 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி. டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, யுவன், சாய் பல்லவி, பாலாஜி மோகன், பாடகி தீக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ரவுடி பேபி செய்த சாதனையை பார்த்து யுவன் ஷங்கர் ராஜாவும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











