70 கோடி வியூஸ்.. தினமும் வீட்டுல ‘ரவுடி பேபி’ போட்டுத் தான் ஆடுறாங்க போல!

Recommended Video

200 மில்லியன் தாண்டிய மாரி 2 ரவுடி பேபி பாடல்- வீடியோ

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள 'ரவுடி பேபி' பாடல் 70 கோடி பார்வையாளர்களை 318 நாட்களில் பெற்று மேலும் ஒரு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் புதிதாக வரும் பாடல்களுக்கெல்லாம் தனது அடுத்தடுத்த மைல்கல்களால் டஃப் கொடுத்து வருகிறது ரவுடி பேபி பாடல்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாரி 2 படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், படைத்து வரும் சாதனைகளால் படத்தின் புகழ் வேற லெவலுக்கு சென்றுள்ளது.

யுவன் மேஜிக்

அனிருத், சந்தோஷ் நாராயணன் இசையில் நடித்து வந்த நடிகர் தனுஷ், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இணைந்த மேஜிக் தான் ரவுடி பேபியின் இந்த அபார வரவேற்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

கலாய்த்தார்கள்

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் வெளியான புதிதில், என்னடா கோலிசோடா, கறி குழம்புன்னு தனுஷ் மொக்கையாக பாடல் வரிகளை எழுதியுள்ளாரே என பலரும் கலாய்த்தார்கள். ஆனால், ரவுடி பேபியின் இந்த இமாலய வெற்றி கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது.

டான்ஸ் தான் டாப்

பிரபுதேவாவின் வித்தியாசமான டான்ஸ் ஸ்டெப்புகளால் தான் தொடர்ந்து ரவுடி பேபி பாடல் யூடியூபில் அதிகம் பேரால் தினமும் பார்க்கப்பட்டு வருவதாகவும், பல பேர் தினமும் வீட்டில் இந்த பாடலை போட்டுத்தான் ஆடி வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

அடுத்தது

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கும் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தனுஷ் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளதாகவும், துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பட்டாஸ் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு அடுத்ததாக, ராட்சசன் இயக்குநர் ராம்குமார் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 கோடி

100 கோடி

யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடிய ரவுடி பேபி பாடல் 70 கோடி வியூஸ்களை யூடியூபில் அள்ளி புதிய சாதனையை படைத்துள்ளது. இன்னும் 30 கோடி பார்வைகளை பெற்று, 100 கோடி வியூஸ் பெற்ற முதல் இந்திய பாடலாக ரவுடி பேபி, சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 10 கோடி முதல் ரவுடி பேபியின் சாதனைகள் செய்தியாகி வரும் நிலையில், அடுத்தது 75 கோடி சாதனையில் சந்திப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X