ஆத்தாடி 900 மில்லியனாம்ல.. வெறித்தனச் சாதனையில் தனுஷ் படப் பாடல்.. டிரெண்டாக்கும் ரணகள ரசிகர்கள்!

By

சென்னை: தனுஷ் படப் பாடல் 900 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

Recommended Video

வைரலாகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீடியோ! - வீடியோ

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த படம், மாரி. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது.

இதையும் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார்.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் படத்துக்கு இசை அமைத்திருந்தார் யுவன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் படம் வெளியான போதே சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் விடியோ சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பைப் பெற்றன.

சர்வதேச அளவில்

சர்வதேச அளவில்

இதன் நடன இயக்குநர் பிரபுதேவா, நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்தன. கடந்த வருட ஏப்ரல் மாதம், யூடியூப்பில் இந்தப் பாடல் 40 கோடி பார்வையாளர்களைப் பெற்று மிரட்டியது. இதனால் இந்தப் பாடல் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. யூடியூப்பில் தமிழ்ப் பாடல்களில் அதிகமானவர்கள் ரசித்த பாடலாகவும் சாதனைப் படைத்தது.

சாதனை படைக்கும்

சாதனை படைக்கும்

கடந்த டிசம்பர் மாதம் இந்தப் பாடலை 72 கோடி பார்த்திருந்தனர். இந்திய அளவில் கடந்த வருடம் டிரெண்டிங்கான யூடியூப் வீடியோக்களில் இந்தப் பாடல் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 7 வது இடம் பெற்றிருந்தது. மேலும் பல சாதனைகளை இந்தப் பாடல் படைக்கும் என்றும் கூறப்பட்டது. 100 கோடி வியூஸ் பெற்ற முதல் இந்திய பாடலாக ரவுடி பேபி சாதிக்கும் என்று கூறப்பட்டது.

900 மில்லியன் பார்வை

900 மில்லியன் பார்வை

இந்நிலையில் இந்தப்பாடல் இப்போது 900 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில், அதிக பார்வைகளைக் கொண்ட பாடல் என்னும் சாதனையயும் படைத்திருக்கிறது, இந்த ரவுடி பேபி. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பில்லியனை நோக்கி

பில்லியனை நோக்கி

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும் 'ஆதரவு கொடுத்த அனைத்து ரவுடி பேபிகளுக்கும் நன்றி. பில்லியனை நோக்கி..' என்று பதிவிட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள், #Rowdybabyhits900million என்ற ஹேஷ்டேக்கில் இதை டிரெண்டாக்கி வருகின்றனர். அதில் இந்தப் பாடல் பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X