»   »  நம்பருக்கு பாடிகார்டான 'ரவுடி' இயக்குநர்

நம்பருக்கு பாடிகார்டான 'ரவுடி' இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பர் நடிகைக்கு ரவுடி இயக்குநர் பாடிகார்டாக மாறியதுதான், கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட்-டாக்.

நீண்ட முயற்சிகளுக்குப் பின் இரண்டு முகங்களைக் கொண்ட படத்தில், சாமி நடிகருக்கு ஜோடியாக நம்பர் நடித்து வருகிறார்.

Rowdy Director Turns Bodyguard Avatar

வெளிநாடுகளைத் தொடர்ந்து தற்போது லோக்கல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரவுடி இயக்குநர் நடிகையை தினமும் அழைத்து வந்து கூட்டிச் செல்கிறாராம். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு முடியும் வரை, நடிகைக்காக படப்பிடிப்புத் தளத்திலேயே காத்திருக்கிறாராம்.

ரவுடி படம் ஹிட்டடித்ததில் இருந்து இயக்குநரின் அடுத்த படத்துக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது தெரிந்தும் கூட இயக்குநர் கவலையின்றி இருப்பது அவரின் அபிமானிகளை வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது.

மற்றொருபுறம் படமெடுப்பதை விட்டு இப்படி ஜிம்பாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாரே, என்று அவர் காதுபடவே பலர் நக்கலடித்து வருகின்றனர்.

ஆனால் யார் என்ன சொன்னாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், தனது பாடிகார்டு வேலையை இயக்குநர் கண்ணும், கருத்துமாக இயக்குநர் தொடர்ந்து வருகிறாராம்.

English summary
Sources Said Rowdy Director Turned Bodyguard Avatar for Number Actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil