என்னை தேடி வர்றவங்களுக்கு நான் இறங்கி செய்வேன்... விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு கமல் உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனது முதல் படத்திலிருந்தே தனது ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து வருகிறார். தென்மேற்கு பருவக்காற்றுக்கு முன்னதாகவே வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

வித்தியாசமான கெட்டப்புகள்

வித்தியாசமான கெட்டப்புகள்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னை முக்கியமான நடிகராக நிலைநிறுத்திக் கொண்டாலும் வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவரை திருநங்கையாகவும் பார்க்க முடிகிறது. ஏழை விவசாயியாகவும் பார்க்க முடிகிறது. வயதான கெட்டப்பிலும் பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதுமட்டுமின்றி தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனான இவர் தற்போது உலநாயகன் கமலுக்கும் விக்ரம் படத்தில் வில்லனாகியுள்ளார். படத்தில் இவரது கெட்டப் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போதே காணப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்

விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்

அதுமட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். தனக்கு கமர்ஷியல் கெட்டப்புகளும் சிறப்பாக வரும் என்பதையும் தனது படங்களின்மூலம் நிரூபித்து வருகிறார். படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

கமல் வாழ்த்து

கமல் வாழ்த்து

இதையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் சக நடிகர்கள், நடிகைகளும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ரௌடி பிக்சர்ஸ் வாழ்த்து

ரௌடி பிக்சர்ஸ் வாழ்த்து

ஜூனியர் நடிகராக இருந்து மக்கள் போற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகராக விஜய் சேதுபதி மாறியுள்ளதாக ரௌடி பிக்சர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளது. இயற்கையான நடிப்பில் அவரை அடித்துக் கொள்ள முடியாது என்றும் பாராட்டியுள்ளது.

விரைவில் படம் ரிலீஸ்

விரைவில் படம் ரிலீஸ்

மேலும் தங்களது புரொக்ஷனில் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் விரைவில் வெளியாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. படத்தில் ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்ற கேரக்டரில் ராம்போவாக விஜய் சேதுபதி நடித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் வாழ்த்து

இதேபோல சன் பிக்சர்சும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. அதில் விஜய் சேதுபதி நடித்துள்ள பல படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X