twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் ரேசில் ஆர்ஆர்ஆர்... ஆனாலும்... இந்த கேள்வி சரி தானே?

    |

    சென்னை : டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பல நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் 1920 களில் ஐதராபாத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.

    தியேட்டர்களில் 1200 கோடி வசூலை பெற்ற இந்த படம், அதைத் தொடர்ந்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஓடிடி.,யிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    என்னமா படம் எடுத்திருக்காங்க...ஆர்ஆர்ஆர் படத்தை யார் இப்படி பாராட்டி இருக்காங்க தெரியுமா? என்னமா படம் எடுத்திருக்காங்க...ஆர்ஆர்ஆர் படத்தை யார் இப்படி பாராட்டி இருக்காங்க தெரியுமா?

    ஹாலிவுட் எழுத்தாளர் பாராட்டு

    ஹாலிவுட் எழுத்தாளர் பாராட்டு

    சமீபத்தில் டாக்டர் ஸ்டிரேஞ்சர்ஸ் பட திரைக்கதை எழுத்தாளர் ஜான் ஸ்பெயிட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்த விட்டு 2 நாள் வரை அதை மறக்க முடியவில்லை என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். வெளிநாட்டினரையும் ஆர்ஆர்ஆர் படம் அதிகம் வசீகரித்துள்ளது.

    ஆஸ்கர் பட்டியலில் ஆர்ஆர்ஆர்

    ஆஸ்கர் பட்டியலில் ஆர்ஆர்ஆர்

    இந்நிலையில் 2023 ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர் படமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறந்த சர்வதேச படத்திற்கான பிரிவில் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஆர்ஆர்ஆர் படத்தில் ஆஸ்கர் விருது கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    வேற எந்த படமெல்லாம் இருக்கு

    வேற எந்த படமெல்லாம் இருக்கு

    ஆர்ஆர்ஆர் தவிர, பிரான்ஸ் நாட்டின் 'Both Sides of the Blade', 'One Fine Morning', ஆஸ்திரியாவின் 'Corsage', கொரியாவின் 'Decision to Leave', டென்மார்க்கின் 'Holy Spider', பெல்ஜியத்தின் 'Tori and Lokita', பொலிவியாவின் 'Utama' போன்ற படங்களும் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்றுள்ளனவாம்.

     இந்த கேள்வி சரியானது தானே

    இந்த கேள்வி சரியானது தானே

    ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், Danny Boyle இயக்கிய ஸ்லம்டாக் மில்லினர் படம் சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றது. ஆனால் அது போல் ஆர்ஆர்ஆர் படம் ஏன் முக்கியமான பிரிவுகளின் கீழ் விருதுகளுக்காக பரிந்துரையில் இடம்பெறவில்லை என பல வெளிநாட்டு ஆஸ்கர் பரிந்துரையாளர்கள் கேள்வி எழுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

    ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு

    ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு

    இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆர்ஆர்ஆர் படம் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்பட்டால் ஆஸ்கர் விருது ரேசில் ஆர்ஆர்ஆர் இன்னும் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நமது பக்கமிருந்து அழுத்தம் அதிகரித்தால் ஆஸ்கர் பரிந்துரை கமிட்டியும் ஆர்ஆர்ஆர் படத்தை கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    English summary
    'Roudram Ranam Rudhiram' could well win an Oscar award in 2023 in the Best International Feature Film category. The movie has attracted the attention of almost all prominent film observers who matter in the West.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X