தனி விமானம் முதல் சொகுசு கார் வரை.. ஆர்ஆர்ஆர் ஹீரோ ஜூனியர் என்டிஆரிடம் இத்தனை கோடி சொத்து இருக்கா?

ஹைதராபாத்: ஆஸ்கர் மேடை வரை சென்று அசத்திய ஆர்ஆர்ஆர் நாயகர்கள் பற்றித்தான் உலகம் முழுக்க பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தாத்தா என்டிஆரே ஆந்திராவில் முதலமைச்சராக இருந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய நிலையில், பேரன் ஜூனியர் என்டிஆர் மட்டும் என்ன சும்மாவா இருப்பார்.

ஹாலிவுட் இயக்குநர்களின் பார்வையே தற்போது ஜூனியர் என்டிஆர் மீது விழுந்து வரும் நிலையில், ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் முதல் அவருக்கு இருக்கும் பல கோடி சொத்துக்கள் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

பெரிய குடும்பத்து பிள்ளை

பெரிய குடும்பத்து பிள்ளை

என்.டி. ராமாராவின் பேரனும் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகனுமான ஜூனியர் என்டிஆர் டோலிவுட்டில் என்டிஆர் என்றே தற்போது ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தனது புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். 39 வயதாகும் ஜூனியர் என்டிஆர் லக்‌ஷ்மி பிரணதி என்பவரி கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஆர்ஆர்ஆர் ஹீரோ

ஆர்ஆர்ஆர் ஹீரோ

பிரம்மரிஷி விஸ்வாமித்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஜூனியர் என்டிஆர் ராஜமெளலி இயக்கத்தில் யமதொங்கா படத்தில் 2007ம் ஆண்டு நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோவாக நடிகர் ராம்சரண் உடன் இணைந்து நடித்து மாஸ் காட்டினார். புலியுடன் மோதும் அறிமுக காட்சியை பார்த்தே ஹாலிவுட் ரசிகர்கள் வாய் பிளந்த நிலையில், ராம்சரணுக்கு இணையாக நாட்டு நாட்டு பாடலில் நடனம் ஆடி அகில உலகத்தையும் ஆட வைத்தவர் ஜூனியர் என்டிஆர்.

எத்தனை கோடி சம்பளம்

எத்தனை கோடி சம்பளம்

மாத வருமானமே 3 கோடி ரூபாய் என்றும் ஒரு படத்துக்கு சமீப காலமாக ஜூனியர் என்டிஆர் 36 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் ஆர்ஆர்ஆர் ரீச் ஆஸ்கர் வரை சென்ற நிலையில், விரைவில் 50 கோடி வரை ஜூனியர் என்டிஆர் சம்பளத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனி விமானம்

தனி விமானம்

பல கோடி ரூபாய்க்கு சொகுசு கார்களை வைத்திருக்கும் ஜூனியர் என்டிஆர் தனியாக ஒரு பிரைவேட் ஜெட்டையே வைத்துள்ளார் என்றும் டோலிவுட்டில் பல பிரபலங்கள் இவரது பிரைவேட் ஜெட்டை அவசர வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

பங்களா

பங்களா

ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 25 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமான சொகுசு பங்களா இவருக்கு சொந்தமாக உள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் சில கெஸ்ட் ஹவுஸ்கள் இவரது பெயரில் உள்ளதாக கூறுகின்றனர். பாலிவுட், ஹாலிவுட் பட வாய்ப்புகள் சமீப காலமாக இவரது கால்ஷீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

571 கோடி சொத்து

571 கோடி சொத்து

கொரடல சிவா இயக்கத்தில் NTR30 படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக அந்த படத்தில் போனி கபூர் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். ஜூனியர் என்டிஆருக்கு ஒட்டுமொத்தமாக 70 மில்லியன் டாலர்கள் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பில் 571 கோடி ரூபாய் என்கின்றனர். தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் ராஜா வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜூனியர் என்டிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X