நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
மும்பை : தெலுங்கில் டைரக்டர் ராஜமவுலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார் ஆலியா பட். இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் சீதா கேரக்டரில் ஆலியா நடித்து வந்தார்.
இதற்கிடையில் ஆலியா இந்தியில் நடத்த கங்குபாய் படமும் தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், ஜு 30 ம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இத்துடன் ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் பிரம்மாஸ்திரம் என்ற படத்திலும் ஆலியா நடிக்கிறார். அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக இருந்த ஆலியா பட், ஏப்ரல் 2 ம் தேதி தனக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா நெகடிவ் ஆகி உள்ளதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் நெகடிவ் நல்லதாவது இந்த சமயத்தில் தான் என குறிப்பிட்டுள்ளார். ஆலியாவின் இந்த பதிவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











