ஆர்ஆர்ஆர் அப்டேட்…போராளியாக அஜய் தேவ்கன்... மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை : பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனின் கதாபாத்திரம் குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
முன்னணி நடிகர்கள்
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின்ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

வரலாற்றுத் திரைப்படம்
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த அப்டேட்டுகள்
இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில்,இப்படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதில் ஆலியாபட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜமௌலி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஆலியா பட் குத்தவைத்து சோகமே உருவான முகத்துடன் அப்படியே பார்ப்பதற்கு சீதாவைப்போல் இருந்தார். இதே போல கையில் வில்லுடன் ராமர் வேடத்தில் ராம் சரண் போஸ்டரும் வெளியாகி டிரெண்டிங்கானது.

போராளியாக
இன்று அஜய் தேவ்கன் தனது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரம் குறித்த மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அஜய் தேவ்கன் பிரிட்டிஷாரை எதிர்க்கும் போராளி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஆனால் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











