ராஜமெளலியுடன் மோத தயாரான பிரபாஸ்.. ஒரே தேதியில் வெளியாகிறதா RRR மற்றும் ராதே ஷ்யாம்?

சென்னை: ஓமிக்ரான் பரவல் குறைந்து வருவதால் ரிலீசாகாமல் காத்திருக்கும் அத்தனை பெரிய படங்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வரிசை கட்டி ரிலீசாக காத்திருக்கின்றன.

பிப்ரவரி சில பெரிய படங்களும், மார்ச் மாதம் RRR, ராதே ஷ்யாம் என பெரிய படங்கள் வெளியாகும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

இதில், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படமும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் ஒரே நாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒருவார இடைவெளி

ஒருவார இடைவெளி

ஜனவரி 7ம் தேதி ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ஜனவரி 14ம் தேதி பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிப்புகள் போடப்பட்ட நிலையில், அந்த இரு பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது.

மார்ச் 18

மார்ச் 18

கொரோனா பரவல் குறைந்து லாக்டவுன் நீக்கப்பட்டால் மார்ச் 18ம் தேதியே ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அதே தேதியை பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோத தயாராகும் பிரபாஸ்

மோத தயாராகும் பிரபாஸ்

ஜனவரி மாதம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், மற்ற பெரிய படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டன. அப்போதும் பிரபாஸின் ராதே ஷ்யாம் மோத தயாராக இருந்தது. அப்போது கூட ஒரு வார இடைவெளி இருந்தது. ஆனால், தற்போது இரு படங்களும் மார்ச் 18ம் தேதியன்று வெளியாகும் என்கிற தகவலால் ராஜமெளலி உடன் மோத பிரபாஸ் தயாராகி விட்டார் எனக் கூறப்படுகிறது.

வலிமை எப்போது

வலிமை எப்போது

வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி விஷாலின் வீரமே வாகை சூடும், பிப்ரவரி 18ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகுமா? அல்லது மார்ச் 4ம் தேதி வெளியாகுமா? என்று இன்னமும் உறுதியாகவில்லை. பிப்ரவரி மாதமே படத்தை வெளியிடக் கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நியோகோவ்

நியோகோவ்

ஓமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பு ஏற்படாத நிலையில், மீண்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்ப ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் புதிதாக நியோகோவ் எனும் அப்கிரேட் கொரோனா வைரஸ் வேரியன்ட் வூகானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மார்ச் அல்லது ஏப்ரலில் நியோகோவின் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் இப்போதே மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X