முதல் நாளிலேயே பாகுபலி, மாஸ்டர் சாதனைகளையும் தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்...கலெக்ஷன் விபரம் இதோ
சென்னை : டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் முதல் நாளிலேயே உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பாகுபலி இரண்டு பாகங்கள் உள்ளிட்ட அனைத்து முந்தைய வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
Recommended Video
ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதல் முறையாகும்.

வரவேற்பை பெற்ற ஆர்ஆர்ஆர்
ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவரும் அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் என்ற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் ரோலில் நடித்துள்ளனர். ராம்சரணின் காதலியாக ஆலியாபட் நடித்துள்ளார். சுதந்திரத்திற்கு முன் நடைபெற்ற கதையாக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அனைத்து தரப்பிடமும் பாசிடிவ் விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளது.

முதல் நாள் கலெக்ஷன் விபரம்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த ஆர்ஆர்ஆர், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 120 கோடிகளை வசூலித்துள்ளது. தமிழகத்தில் கிட்டதட்ட 10 கோடிகளை வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் 14 கோடிகளையும், கேரளாவில் 4 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. இந்தியில் 25 கோடிகளை வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் 75 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மாஸ்டரை ஓரங்கட்டிய ஆர்ஆர்ஆர்
மொத்தமாக ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் 260 கோடிகளை வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 702,480 டாலர்களையும், நியூசிலாந்தில் 69, 741 டாலர்களையும் வசூல் செய்து அழுத்தமான இடத்தை பிடித்துள்ளது ஆர்ஆர்ஆர். ஆஸ்திரேலியாவில் விஜய்யின் மாஸ்டர், பாகுபலி இரண்டு பாகங்களின் வசூல் சாதனைகளை ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது.

அடேங்கப்பா...இப்படி ஒரு சாதனையா
அமெரிக்காவில் முதல் நாளிலேயே 5 மில்லியன் டாலர் கிளப்பில் ஆர்ஆர்ஆர் படம் இணைந்துள்ளது. The lost City, The Batman ஆகிய படங்களில் வசூல் சாதனையையும் ஆர்ஆர்ஆர் தவிடு பொடியாக்கி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை மூன்று தெலுங்கு படங்கள் தான் முதல் நாளில் 4 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை வசூல் செய்துள்ளன. அவை பாகுபலி, பாகுபலி 2, தற்போது ஆர்ஆர்ஆர். இவை மூன்றுமே ராஜமெளலி இயக்கிய படங்கள் தான்.


Click it and Unblock the Notifications











