twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    RRR box office collection: 3 நாட்களில் இத்தனை கோடியா? உலக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜமெளலி!

    |

    ஹைதராபாத்: மார்ச் 25ம் தேதி உலகளவில் வெளியான இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் வாரத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டிவிவி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜமெளலி இயக்க ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு குவிந்து வரும் நிலையில், முதல் வாரத்திலேயே ரூ. 450 கோடி வசூலை இந்த படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

     சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது... தட்டித் தூக்கிய என்கான்டோ படம்! சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது... தட்டித் தூக்கிய என்கான்டோ படம்!

    இந்தியாவின் பெருமை

    இந்தியாவின் பெருமை

    பாகுபலியின் இரண்டு பாகங்களும் இந்தியாவின் பெருமை மிகு படைப்பாக மாறி அதிக பட்சமாக 2000 கோடி வரை வசூலை அந்த படங்கள் பெற்றிருந்தன. இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மீண்டும் இந்தியாவின் பெருமை மிகு படைப்பாக சர்வதேச அளவில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    முதல் நாளிலேயே ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி ரூபாயை உலகளவில் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது என்கிற பெருமையை அடைந்தது. கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய படம் என்கிற பெருமையையும் ஆர்ஆர்ஆர் படம் பெற்றது. டோலிவுட்டில் முதல் நாளிலேயே 120 கோடிக்கும் அதிகமாக வசூல் அள்ளிய இந்த படம் பாலிவுட்டில் 75 கோடி வரை முதல் நாளில் வசூல் ஈட்டியது.

    இரண்டாம் நாள் வசூல்

    இரண்டாம் நாள் வசூல்

    படத்திற்கு திரும்பிய இடமெல்லாம் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிய மேலும், படத்தை பார்த்தால் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என ப்ளூசட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்களே சொன்ன நிலையில், ஏகப்பட்ட டிக்கெட்டுகள் 2ம் நாளும் விற்றுத் தீர்ந்தன. 100 முதல் 110 கோடி வரை இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்ததாக கூறப்படுகிறது.

    450 கோடி

    450 கோடி

    ஞாயிற்றுக்கிழமை உலகளவில் படத்திற்கு 126 கோடி முதல் 130 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட்டில் மட்டும் 250 கோடிக்கு மேல் 3 நாட்களில் இந்த படம் வசூல் செய்துள்ளதாகவும் உலகளவில் 450 கோடிக்கும் அதிகமாக RRR படம் வசூல் ஈட்டியுள்ளதாக வியப்பில் ஆழ்த்தும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வந்துள்ளன. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    RRR Box Office Collection Day 3 peaks a huge margin in global box office. SS Rajamouli’s grandeur vision makes huge collection on first week
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X