RRR Box Office Prediction: ஆர்ஆர்ஆர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடி வருமா? எப்படி?
சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாளை (மார்ச் 25) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
Recommended Video
கடந்த ஒரு வாரமாக, காசி, வாரணாசி, அம்ரித்சரஸ் என இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும் நகரங்களுக்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் சாமி தரிசனம் மற்றும் புரமோஷன் பணிகளை மேற்கொண்டார் இயக்குநர் ராஜமெளலி.
பாகுபலி படங்கள் மூலம் 2000 கோடி வசூலை சாதித்துக் காட்டிய இயக்குநர் ராஜமெளலி அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை ஆட காத்திருக்கிறார். அது தொடர்பான பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு குறித்த அலசலை இங்கே காண்போம்.

எக்கச்சக்க எதிர்பார்ப்பு
சமீப காலமாக எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்கும் படங்கள் ரிலீசுக்கு பிறகு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி பெரிய வெற்றியை பெற முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மற்ற பெரிய படங்களை விட பெரிய அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை தனது பிரம்மாண்ட புரமோஷன் மூலம் மேலும், அதிகரித்து வருகிறார் ராஜமெளலி.

கதை தான் ஹீரோ
வெறும் முன்னணி ஹீரோக்கள் திரையில் தோன்றி முகத்தைக் காட்டினால் போதும் ரசிகர்கள் டிக்கெட் வாங்கி படத்தை பார்த்து ஹிட் ஆக்கி விடுவார்கள் என்பதை ராஜமெளலி ஒரு போதும் நம்புவதில்லை. திரைக்கதை தான் படத்தின் ஹீரோ என்றும் அதற்கான கடுமையான உழைப்புடன் மேக்கிங் இருந்தால் தான் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுக்கும் என நினைப்பவர். பாகுபலி படத்தில் அதனை சாதித்தும் காட்டியவர்.

250 கோடியா
அதே எதிர்பார்ப்பு இன்னமும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு அதிகரித்து இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் முதல் நாளில் உலகளவில் அதிகபட்சமாக ரூ. 250 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் பிரெடிக்ஷன்கள் வெளியாகி உள்ளன. மேலும், எந்த எந்த ஏரியாவில் எப்படி வசூல் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில்
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், நடித்திருக்கும் இந்த படம் டோலிவுட் திரையுலகமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் ரூ. 110 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில்
ஆர்ஆர்ஆர் டிரைலர் தெலுங்கு மொழியை விட இந்தியில் 75 மில்லியன் பேர் இதுவரை பார்த்துள்ளனர். அங்கேயும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் இருக்கிறது. மேலும், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் அசால்ட்டாக முதல் நாளில் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும், 100 கோடி வசூல் சாதனையை எட்டியது. இந்நிலையில், வட இந்தியாவில் இந்த திரைப்படம் ரூ. 25 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில்
இயக்குநர் ராஜமெளலியின் மேக்னம் ஓபஸ் திரைப்படமான RRR கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்புகளை எல்லாம் கடந்து முதல் நாளில் ரூ. 14 கோடி வரை கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் கன்னட வெர்ஷனை அதிக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் எப்படி இருக்கும்
ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மொத்தமாக முதல் நாளில் ரூ. 10 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் வரை தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் வரை கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

75 கோடி
கேரளாவில் இந்த திரைப்படம் ரூ. 4 கோடி வரை வசூல் ஈட்டலாம் என்றும் வெளிநாடுகளில் மொத்தமாக முதல் நாளில் ரூ. 75 கோடி வரை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ஈட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பிரெடிக்ஷன் வசூலை தாண்டியும் ஆர்ஆர்ஆர் முதல் நாளில் வசூலை ஈட்டும் என்றும் ஆர்ஆர்ஆர் படக்குழு மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. விமர்சகர்களிடம் இருந்து தப்பித்து விட்டாலே பெரிய கலெக்ஷனை படம் அள்ளி விடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











