ஆஸ்கர் விழாவில் ராஜமௌலிக்கு கடைசி இருக்கை.. புது சர்ச்சையால் பரபரப்பு!
சென்னை : ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் பட இயக்குநருக்கு கடைசி இருக்கை கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
95வது அகாடமி விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்த விழாவை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம் பெற்றிருந்தார்.

95வது ஆஸ்கர் விருது
95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றது. ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோர் இணைந்து வந்து ஆஸ்கர் விருதை பெற்றனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு விருது
அதே போல, ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு வரும் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது பெற்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி ராஜமௌலிக்கு பாட்டு பாடி நன்றி தெரிவித்தார்.

புது சர்ச்சை
இந்நிலையில், ஆஸ்கர் விழாவில் ராஜமௌலிக்கு கடைசி இருக்கை வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடன் ஒருவரை அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த விழாவில் ராஜமௌலி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டார்கள். மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானோர் அமரக்கூடிய டால்பி தியேட்டரில் இவர்களுக்கு கடைசி இருக்கை கொடுத்தது ஏன் என ரசிகர்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். ஆனால் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் அவர்கள் மேடைக்கு அருகில் அமர்ந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொந்தளித்த ரசிகர்கள்
அதேபோல,ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல், ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் திரைப்படம் என கூறியது, தென்னிந்திய திரையுலக ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் அப்படி கூறியதை கேட்ட நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











