twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் வெப்சீரிஸை எடுக்க பிளான் போட்ட ராஜமெளலி.. ஆனால், கடைசியில் இப்படி ஆகிடுச்சே?

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி பொன்னியின் செல்வன் வெப்சீரிஸை இயக்க திட்டமிட்டு இருந்ததாக சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

    இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடப் போகும் விளையாட்டு வீரர்கள்! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. பொன்னியின் செல்வன் முதல் பாடலை வெளியிடப் போகும் விளையாட்டு வீரர்கள்!

    13 வருஷம் ஆகிடுச்சு

    13 வருஷம் ஆகிடுச்சு

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்த மகதீரா திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. #13yearsforMagadheera என்கிற ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். இயக்குநர் ராஜமெளலி, பாகுபலி படத்தை இயக்குவதற்கு எல்லாம் முன்னோடியே இந்த மகதீரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மாவீரன் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

    ஹாலிவுட்டே விரும்பும் ஆர்ஆர்ஆர்

    ஹாலிவுட்டே விரும்பும் ஆர்ஆர்ஆர்

    நான் ஈ, மகதீரா, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்த பாக்ஸ் ஆபிஸ் படங்களை இயக்கி உலகையே இந்திய திரையுலகை அசந்து பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை நெட்பிளிக்ஸில் உலகம் முழுக்க பார்த்த ஹாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் படத்தை தினமும் சோஷியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தி கிரேமேன் இயக்குநர்களான ரூசோ சகோதரர்களும் ராஜமெளலி படத்தை பாராட்டினர்.

    பொன்னியின் செல்வன் சீரிஸ்

    பொன்னியின் செல்வன் சீரிஸ்

    பொன்னியின் செல்வன் கதையின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் ராஜமெளலி. சினிமாவாக அந்த கதையை சொல்ல முடியாது என்றும், வெப்சிரீஸாக 8 மணி நேரத்திலேயோ அல்லது 20 மணி நேரத்திலேயோ பிரம்மாண்டமாக சொல்ல வேண்டும் என நினைத்து இருந்தார். ஆனால், அதற்கு முன்னதாக இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் நிலையில், வெப்சீரிஸை உருவாக்கும் முயற்சியை கை விட்டு விட்டார் எனக் கூறுகின்றனர்.

    பாகுபலி படத்தில் பொன்னியின் செல்வன்

    பாகுபலி படத்தில் பொன்னியின் செல்வன்

    சிவகாமி தேவி பாகுபலி முதல் பாகத்தில் அந்த குழந்தையை தூக்கி சுமந்து வரும் காட்சியே பொன்னியின் செல்வன் கதையில் பொன்னி நதி குழந்தையை தனது கைகளால் காப்பாற்றிய காட்சியின் இன்ஸ்பிரேஷன் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் கதை பற்றி ராஜமெளலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Recommended Video

    Ponniyin Selvan புத்தகத்தை நெஞ்சில் சுமந்து நடிச்சோம் , JayamRavi speech | PS1 Song lauch *Kollywood
    பொன்னி நதி

    பொன்னி நதி

    பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பொன்னி நதி பாடல் வெளியாகிறது. விளையாட்டு வீரர்களான ரவிச்சந்தர் அஸ்வின், சஞ்சு சாம்சன் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் ஒவ்வொரு மொழியிலும் பொன்னி நதி பாடலை இன்று மாலை சமூக வலைதளம் வாயிலாக வெளியிடுகின்றனர். எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

    English summary
    RRR Director SS Rajamouli Wanted To Make A Ponniyin Selvan Series before Maniratnam starts the Ponniyin Selvan project. He is a great fan for Ponniyin Selvan Novel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X