மிகப்பெரிய கட் அவுட்கள்.. மலர் அலங்காரங்கள்.. பட்டாசு வெடிக்க.. RRR FDFS-ஐ கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை: பிரேஸ் யுவர்செல்ஃப் ஃபார் ராம்.. பிரேஸ் யுவர்செல்ஃப் ஃபார் பீம் என டிரைலரிலேயே ராஜமெளலி அறிவித்து விட்டார்.

Recommended Video

RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

டோலிவுட்டின் இரு பெரும் நடிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தில் நீரும் நெருப்புமாக அட்டகாசம் செய்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் இன்று படம் வெளியாகி உள்ள நிலையில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தியேட்டர்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

வேற லெவல் மாஸ்

சுதர்ஷன் 35 எம்எம் திரையரங்கில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சரிசமமாக கட் அவுட்கள் வைக்கப்பட்டு முழுவதும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வேற லெவல் RRR FDFS கொண்டாட்டத்தை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

அமெரிக்காவில் வேன் ஒன்றில் இயக்குநர் ராஜமெளலியின் டிஜிட்டல் புகைப்படத்துடன் ஹார்டி கங்குராஜுலேஷன்ஸ் ராஜமெளலி என வாழ்த்து செய்தி எழுதப்பட்டிருப்பதை பார்த்து வியந்து போன ரசிகர்கள் அதன் போட்டோவை சோஷியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

குடும்பத்துடன் ஜூனியர் என்டிஆர்

குடும்பத்துடன் ஜூனியர் என்டிஆர்

அதிகாலையிலேயே RRR FDFS காட்சியை தனது மனைவி மற்றும் மகன் என குடும்பத்துடன் வந்து தியேட்டரில் படம் பார்த்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை நோக்கி சூப்பர் என கை அசைத்ததை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தியேட்டரிலும் நேரிலும் தாரக்கின் தரிசனத்தை கண்டு ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.

மகேஷ் பாபு ரசிகர்கள்

மகேஷ் பாபு ரசிகர்கள்

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சென்னையை சேர்ந்த மகேஷ் பாபுர் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஸ்பெஷலான கட் அவுட் வைத்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மெகா கட் அவுட்

மெகா கட் அவுட்

ஒவ்வொரு தியேட்டரில் ராம்சரணுக்கு மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து வேற லெவல் சம்பவத்தை ரசிகர்கள் செய்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணின் நடிப்பும் ஏகப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்க சக்திக்கு துணை போகும் நபராக இருக்கும் ஒருவர் இந்திய மக்களுக்காக மாறி மிரட்டுவதே இந்த படத்தின் கதை என்கின்றனர்.

செம ஆட்டம்

நாட்டுக்கூத்து பாட்டுக்கு ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டிஆர் உடன் இணைந்து ஒட்டுமொத்த தியேட்டரும் வேற லெவல் வெறி ஆட்டத்தை போட்டு வருகிறது என ஏகப்பட்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X