அரங்கத்தை அதிர வைத்த ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. புஷ்பா படத்திற்கு பிறகு மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சி இது தான்.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள ரெளத்திரம் ரணம் ருத்ரம் படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி
மிக பிரம்மாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பர் 27 ம் தேதியும், ஐதராபாத்தில் ஜனவரி 30 ம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக லைகா அறிவித்திருந்தது. ஆனால் ஒமைக்ரைன் பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஐதராபாத்தில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பிரம்மாண்டம்
இந்நிலையில் இன்று சென்னை வர்த்தக மையத்தில் ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் சென்னையிலும் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கலந்து கொண்ட பிரபலங்கள்
இதில் ராஜமெளலி, ராம்சரண், ஜுனியர் என்டிஆர், உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மதன் கார்க்கி, ஆர்.பி.செளத்ரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆடல், பாடலுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கலக்கிய சாண்டி மாஸ்டர்
டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது குழுவினருடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட நாட்டு நாட்டு பாடலுக்கு அதே போல் உடையணிந்து, அதே ஸ்டெப்களை போட்டு நடனமாடி அனைவரையும் அசர வைத்தார். இதனை ராஜமெளலி உள்ளிட்டோர் மிகவும் ரசித்தனர்.


Click it and Unblock the Notifications











