twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புதிய சாதனைப் படைத்த ‘ஆர்ஆர்ஆர்’: இந்தியா மட்டும் இல்ல உலகம் முழுக்க டாப்

    |

    ஐதராபாத்: ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    Recommended Video

    Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

    ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்ற 'ஆர்.ஆர்.ஆர்' தற்போது ஓடிடியில் புதிய சாதனை படைத்துள்ளது.

    ரோலெக்ஸ் ரேடியோவை ஆட்டையை போட்ட ஷிவானி.. குட்டி டிரெஸ்ஸில் சும்மா கும்முன்னு இருக்காரே! ரோலெக்ஸ் ரேடியோவை ஆட்டையை போட்ட ஷிவானி.. குட்டி டிரெஸ்ஸில் சும்மா கும்முன்னு இருக்காரே!

    பிரம்மாண்டத்தின் உச்சம் ஆர்ஆர்ஆர்

    பிரம்மாண்டத்தின் உச்சம் ஆர்ஆர்ஆர்

    'பாகுபலி' படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங்கை பார்ந்து மிரண்டு நின்ற இந்தியத் திரையுலகத்திற்கு, மீண்டும் ஒரு விருந்து படைக்க நினைத்தார் ராஜமெளலி. அப்படி உருவானதே ‘ஆர்.ஆர்.ஆர்' என்ற மாபெரும் பிரம்மாண்ட சினிமா. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்கொண்டே இருக்க, இறுதியாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி வெளியானது.

    வசூலில் சூறையாட்டம் நடத்திய ஆர்.ஆர்.ஆர்

    வசூலில் சூறையாட்டம் நடத்திய ஆர்.ஆர்.ஆர்

    ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் இடையேயான நட்பை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் பிரியாடிக்கல் திரைப்படமாக இயக்கியிருந்தார் ராஜமெளலி. காட்சிக்கு காட்சி மெகா பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரிய வரவேற்பு கிடைத்தது. சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை வசூலித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    ராஜமெளலியின் தரமான சம்பவம்

    ராஜமெளலியின் தரமான சம்பவம்

    பாகுபலியை போல ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங்கிலும் அனைவரையும் அசர வைத்த ராஜமெளலி, இந்திய சின்மாவின் தனி அடையாளமாகிப் போனார். இதோ இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப் படமும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே திரையரங்குகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர், நெட்பிளிக்ஸ், ஜீ5, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் வெளியானது.

    தொடர்ந்து பெரும் சாதனை

    தொடர்ந்து பெரும் சாதனை

    திரையரங்குகளில் வெளியான போதே, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், தற்போது ஓடிடியிலும் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் அதிகம் சந்தாதாரர்களை கொண்ட ஓடிடி தளம் என்ற சிறப்பு நெட்பிளிக்ஸ்க்கு உண்டு. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில், சர்வதேச அளவில் ரசிகர்கள் அதிகம் விரும்பிய படமாக ‘ஆர்.ஆர்.ஆர்' ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுவும் தொடர்ந்து 14 வாரங்கள் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த சாதனையை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜமெளலி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    English summary
    Rajamouli's RRR film hit theaters in March and get a huge success. The film has now set a new record on the Netflix OTT platform as well
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X