ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக்கான RRR ஹெச்டி பிரின்ட்.. பறக்கும் டவுன்லோடு.. அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிப்பில் கடந்த மார்ச் 24ம் தேதி வெளியானது ஆர்ஆர்ஆர்.

அதன் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில், அதன் ஹெச்டி பிரின்ட் பைரஸி தளங்களில் லீக்காகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் ஓடிடி உரிமமே 300 கோடிக்கு மேல் விற்பனையானதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்படியொரு லீக் படக்குழுவுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

சுடச்சுட லீக்

சுடச்சுட லீக்

தியேட்டரில் படம் வெளியான அடுத்த ஷோவே தமிழ்ராக்கர்ஸ் மற்றும் டெலிகிராமின் பல குரூப்களில் திருட்டுத்தனமாக புதிய படங்கள் வெளியாகி விடுகின்றன. இன்று வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் தியேட்டர் பிரின்ட் மற்றும் ஓடிடியில் வெளியான சாணிக் காயிதம் படத்தின் ஹெச்டி பிரிண்ட் என அனைத்துமே வெளியாகி விட்டன.

1100 கோடி வசூல்

1100 கோடி வசூல்

பாகுபலி 2ம் பாகம் 1800 கோடி வசூல் செய்து அசத்திய நிலையில், அதை விட பெரிய தொகையை ஆர்ஆர்ஆர் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 1100 கோடி வசூலுடன் ஆர்ஆர்ஆர் படம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் என மேலும், ஒரு 300 முதல் 400 கோடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் எப்போ

ஓடிடியில் எப்போ

அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி தான் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜி5 என இரு ஓடிடி தளங்களில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படியொரு ஷாக்கான விஷயம் ஆர்ஆர்ஆர் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஹெச்டி பிரின்ட் லீக்

ஹெச்டி பிரின்ட் லீக்

ஓடிடியில் வெளியான பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹெச்டி பிரிண்ட் லீக் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே பைரஸி தளங்களில் ராஜமெளலி படத்தின் ஹெச்டி பிரின்டே லீக் ஆகி இருப்பது அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

எப்படி கசிந்து இருக்கும்

எப்படி கசிந்து இருக்கும்

வெளிநாடுகளுக்கு ஆர்ஆர்ஆர் படத்தின் டிவிடிகளை விற்பனை செய்திருந்தால் மட்டுமே இதற்கு சாத்தியம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக அஜித்தின் வலிமை திரைப்படமும் ஜீ5 ஓடிடியில் வெளியாக ஒரு வாரத்திற்கு முன்பாகவே பைரஸி தளங்களில் கசிந்து அதிக டவுன்லோடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X