twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    RRR Box Office Collection: 500 கோடி கிளப்பில் இணைந்த ராஜமெளலி படம்.. ஆனால், அது ரொம்ப கஷ்டம்?

    |

    ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

    4 நாட்களில் உலகளவில் 500 கோடி வசூலை இந்த படம் கடந்திருந்தாலும், அந்த பெரிய சாதனையை ஆர்ஆர்ஆர் படைக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

    இங்கேயும் பாக்கி இருக்கு.. “கொஞ்சம் ஸ்மித்தை இங்க அனுப்புங்க“.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!இங்கேயும் பாக்கி இருக்கு.. “கொஞ்சம் ஸ்மித்தை இங்க அனுப்புங்க“.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    பாகுபலி வசூல்

    பாகுபலி வசூல்

    பாகுபலி தி பிகினிங் படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருந்த நிலையில், உலகளவில் அந்த படம் அதிகபட்சமாக 650 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

    1800 கோடி வசூல்

    1800 கோடி வசூல்

    பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்கிற கேள்வியோடு வெளியான பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படம் 250 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட நிலையில், அதன் வசூல் உலகளவில் 1800 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இரண்டு படங்களின் வசூலையும் சேர்த்தால் 2400 கோடி வரை பாகுபலி படங்கள் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

    500 கோடி கிளப்

    500 கோடி கிளப்

    ஒரே பாகமாக வெளியாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் 350 முதல் 400 கோடி வரை பட்ஜெட் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் 4 நாட்களிலேயே உலகளவில் 500 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்து மிகப்பெரிய சாதனை படைந்துள்ளது. ஆனால், பாகுபலி படம் போல ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்காது என கூறப்படுகிறது.

    பாகுபலி 2வை முந்தாது

    பாகுபலி 2வை முந்தாது

    பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் வசூலான 650 கோடியை தாண்டி ஒட்டுமொத்தமாக 850 கோடி முதல் 1000 கோடி வரை ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை ஆர்ஆர்ஆர் முறியடிக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீஸ்ட், கேஜிஎஃப்

    பீஸ்ட், கேஜிஎஃப்

    வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட் மற்றும் ஏப்ரல் 14ம் தேதி யஷ்ஷின் கேஜிஎஃப் என இரு பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் படம் ஓடும் தியேட்டர்கள் அனைத்தும் இந்த இரு படங்களுக்கு சென்று விடும் என தெளிவாக தெரிகிறது. மேலும், திங்கட்கிழமையே ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் பெருமளவில் டிராப் ஆகிவிட்ட நிலையில், இந்த வார இறுதியில் மட்டும் தான் அதன் வசூல் சூடுபிடிக்கும் என்பதால் பெரிய வசூல் வேட்டைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    ராஜா படமில்லை

    ராஜா படமில்லை

    பாகுபலி போல ஆர்ஆர்ஆர் ராஜா காலத்து படம் இல்லை என்பதால் கூட ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க பாகுபலியை பார்க்க தினமும் திருவிழா போல படையெடுத்து தியேட்டருக்கு சென்றது போல செல்வார்களா? என்பது சந்தேகம் தான். எப்படி இருந்தாலும், டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் என மேலும், ஒரு 300 கோடி வசூலை ஆர்ஆர்ஆர் படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடிக்க ராஜமெளலி தனது கனவு திரைப்படமான மகாபாரதத்தை கையில் எடுத்தால் தான் உண்டு என்கின்றனர்.

    English summary
    RRR joins 500 crore club but it can’t beat Bahubali 2 at box office clash buzz circulates in Tollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X