ராம் சரண் நெருப்பு.. ஜூனியர் என்.டி.ஆர் நீர்.. தெறிக்குது ஆர்.ஆர்.ஆர் மோஷன் போஸ்டர்!

சென்னை: பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் டோட்டல் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

களையிழந்து காணப்படும் உகாதி திருநாளை வீட்டில் இருந்தபடியே கொண்டாட வைக்க, ஆர்.ஆர்.ஆர் படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதான் டைட்டிலா?

ஆர்.ஆர்.ஆர் பெயருக்கான அர்த்தம் என்ன என யோசித்து வந்த ரசிகர்களுக்கு, விடை அளிக்கும் விதமாக இரத்தம், ரணம் மற்றும் ரெளத்திரம் என்ற வார்த்தைகளை மோஷன் போஸ்டரில் ரிவீல் செய்துள்ளார் ராஜமவுலி. யுகாதி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ரத்தம்

ரத்தம்

நெருப்பு அனல் கக்க ஓடி வருகிறார் ராம் சரண், அவருக்கு ரத்தம் என்ற டைட்டிலை இயக்குநர் ராஜமவுலி தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதை தான் ஆர்.ஆர்.ஆர். படமாக உருவாகி வருகிறது.

ரெளத்திரம்

ரெளத்திரம்

நெருப்பு நேர் எதிரான நீராக ஜூனியர் என்.டி.ஆர் ஓடி வருகிறார். சிஜி தொழில்நுட்பத்துடன் 3டி எஃபெக்டில் மோஷன் போஸ்டர் தெறிக்க விடுகிறது. ராம் சரண் உருவத்தை போலவே, ஜூனியர் என்.டி.ஆர் உருவமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ரெளத்திரம் என்ற பெயருடன் ஓடி வரும் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உடன் கைகோர்த்து சுதந்திர போரை ஆரம்பித்து வைக்கும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலியா இருக்காங்க

ஆலியா இருக்காங்க

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் இருந்து அண்மையில் பாலிவுட் நடிகை ஆலியா பட், விலகி விட்டதாக சில வதந்திகள் கிளம்பின. ஆனால், உடனடியாக படக்குழு அதனை மறுத்திருந்தது. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள மோஷன் போஸ்டரை ஆலியா பட்டும் ஷேர் செய்துள்ளார்.

டிரெண்டிங்

உகாதி பண்டிகையை முன்னிட்டு ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் #RRRMotionPoster, #RamCharan உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X