ஆர்ஆர்ஆர்… ‘உயிரே‘ பாடல் வெளியீட்டு விழா… தமிழில் பேசிய நெகிழ வைத்த ராஜமௌலி !
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் உயிரே பாடல் வெளியீட்டு விழாவில் ராஜமௌலி தமிழில் பேசி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் தயாராகி உள்ளது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ராஜமௌலி
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் உருவாகி உள்ளது.

வரலாற்று திரைப்படம்
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மன்னிக்கவும்
இந்நிலையில், சென்னையில் இன்று 'உயிரே'பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி அழகாக தமிழில் பேசி அனைவரையும் கவர்ந்தார். உங்களில் இரண்டு மன்னிப்புகளை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசத் தொடங்கினார். தமிழை நான் தவறாக பேசுகிறேன், இன்னும் சரியாக தமிழ் பேச வரவில்லை அதற்காக மன்னிக்கவும், 3 வருடமாக படம் குறித்து உங்களது கேள்விக்கு பதிலளிக்காமல் நான் மட்டும்தான் பேசிக்கொண்டு இருந்தேன். அதற்காகவும் மன்னிக்கவும் என்றார்.

பிரம்மாண்ட படைப்பு
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு, ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம் எமோஸ்னல் தான் எமோஸ்னல் இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எடுக்க முடியாது. உயிரே பாடல் இந்தபடத்தின் உயிர் பாடலாக இருக்கும் என்று ராஜமௌலி பேசினார்.


Click it and Unblock the Notifications











