அதிக வசூலை ஈட்டிய 5வது இந்திய படம்... பீகே படத்தை ஓரங்கட்டிய ஆர்ஆர்ஆர்!
சென்னை : ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 25ம் தேதி இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசான படம் ஆர்ஆர்ஆர். சர்வதேச அளவிலும் ரிலீசாகி தனது பிரம்மாண்டத்தால் ரசிகர்களை மலைக்க வைத்துள்ளது ஆர்ஆர்ஆர். இந்தப் படம் தற்போது 12 நாட்களில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

பிரம்மாண்டங்களின் இயக்குநர்
பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்ற பெயருடன் வலம் வருகிறார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி. இவரது பாகுபலி படங்களை வசூலிலும் பிரம்மாண்டத்திலும் மற்ற படங்களால் தற்போதுவரை பீட் செய்ய முடியாமல் உள்ளன. இந்நிலையில் மற்றவர்களால் பீட் செய்ய முடியாத சாதனையை அவரது ஆர்ஆர்ஆர் படமே பீட் செய்து வருகிறது.

12வது நாளில் ஆர்ஆர்ஆர்
படம் வெளியாகி இன்றைய தினம் 12வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையை வெறும் 11 நாட்களில் முறியடித்தது ஆர்ஆர்ஆர். இந்நிலையில் இன்றைய தினம் அமீர்கானின் பீகே வசூலை பீட் செய்துள்ளது.

அதிக கலெக்ஷன் -5வது படம்
இதையடுத்து தற்போது இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் ஹிட்டடித்த படங்களில் 5வது இடத்தை எட்டியுள்ளது. தற்போது ஒட்டுமொத்தமாக 190 கோடி ரூபாய் கலெக்ஷனை இந்தியில் மட்டுமே எட்டியுள்ளது. நாளைய தினம் 200 கோடி ரூபாயை வசூலை இந்தியில் ஆர்ஆர்ஆர் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்தியாவில் வரவேற்பு
வட இந்தியாவின் ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றுள்ள ஆர்ஆர்ஆர் படம் இன்றைய தினம் சூர்யவன்ஷி படத்தின் வசூலையையும் தாண்டியுள்ளது. இந்தப் படம் தற்போது உலகளவில் 900 கோடி ரூபாய் வசூலை எட்டி அதிக வசூலை ஈட்டிய 5வது இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

வசூலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்
மேலும் இந்தப் படம் தற்போது 4 படங்களின் வசூலை எட்ட வேண்டியுள்ளது. சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பஜ்ரங்கி பாய்ஜான், பாகுபலி 2 மற்றும் தங்கள் படங்கள் முறையே 966 கோடி, 969 கோடி, 1810 கோடி மற்றும் 2024 கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை புரிந்துள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படம் இந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











