ஜனவரியில் ரிலீசாகும் ஆர்ஆர்ஆர் படம்.... ரிலீசுக்கு முன்னதாக அமெரிக்காவில் கோடிகளை குவித்த படம்!

ஐதராபாத் : பாகுபலி பிரம்மாண்ட படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர்.

இந்தப் படம் ஜனவரி 7ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே வெளிநாட்டில் மட்டும் கோடிக்கணக்கில் வசூலித்துள்ளது.

 ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார். அவரது பாகுபலி படங்களின் வெற்றியை அடுத்து இந்த பிரம்மாண்ட படத்தை அவர் இயக்கியுள்ளார்.

பிரம்மாண்ட தயாரிப்பு

பிரம்மாண்ட தயாரிப்பு

இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவைவும் பிரம்மாண்டமான வகையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படம் வரும் ஜனவரி 7ம் தேதி உலகளவில் ரிலீசாகவுள்ளது.

அதிகமான பொருட்செலவு

அதிகமான பொருட்செலவு

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் பிரமோஷன் பணிகளும் சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. டிவிவி தனய்யா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அதிக பொருட்செலவில் படம் உருவாகியுள்ளது.

1920களில் நடக்கும் கதை

1920களில் நடக்கும் கதை

1920களில் நடைபெறுவதாக படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நட்பை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற டைட்டிலின் சுருக்கமே ஆர்ஆர்ஆர் என ஆகியுள்ளது.

அமெரிக்காவில் ரூ.8 கோடி வசூல்

அமெரிக்காவில் ரூ.8 கோடி வசூல்

இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட நிலையில் வசூலிலும் சிற்பபான சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே, படம் அமெரிக்காவில் மட்டும் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

கொஞ்சும் தமிழில் பேசிய Alia Bhatt & Jr.NTR | Alia Bhatt Speech in RRR promotion
அமெரிக்க புக்கிங்

அமெரிக்க புக்கிங்

அமெரிக்காவில் 1802 ஷோக்கள் 2,37,994 டிக்கெட்டுகளுடன் புக் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே 8 கோடி ரூபாய் வரை படம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாவதற்கு முன்னதாக புக்கிங்கில் மட்டுமே அதுவும் அமெரிக்காவில் மட்டுமே 8 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X