“ஆர்ஆர்ஆர்“ ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்பார்ம் !

சென்னை : ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி உள்ளார்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் தயாராகி உள்ளது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

வரலாற்றுக்கதை

வரலாற்றுக்கதை

சுதந்திர போராட்ட காலத்தை மையப்படுத்தி கொமரபீம், அல்லுரி சீதாராம ராஜூ ஆகியோரின் வாழ்க்கை பயணமாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் சில பாடல்கள், டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. தெலுங்கு டீசர் வெளியான 10 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளையும், 1.2 லட்சம் லைக்குகளையும் பெற்றது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. இதையடுத்து, கொரோனா அதிவேகமாக பரவியதால், ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டைப் படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

ரிலீஸ் செய்தி அறிவிப்பு

ரிலீஸ் செய்தி அறிவிப்பு

இந்நிலையில்,ஆர்ஆர்ஆர் திரைப்பத்தில் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 25ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X