'ஆர்ஆர்ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போன்னு பாருங்க!
சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநரான எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில்
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராஜமவுலி ஹீரோஸ்
இந்தப் படத்தின் புரமோஷனுக்கு என தனி பாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த புரமோஷன் பாடலில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி, இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களில் நடித்த பிரபாஸ், நிதின், நானி, ரவிதேஜா, சுனில் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

அழகான செட்
இந்த பாடலை காட்சிப்படுத்துவதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஸ்டுடியோவில் அழகான செட்டை வடிவமைத்துள்ளார் எஸ்எஸ் ராஜமவுலி. இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளரான எம்எம் கீரவாணியின் மகன் கால பைரவா பாடியுள்ளார்.

ஜனவரி 7ஆம் தேதி
இதனிடையே ஆர்ஆர்ஆர் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்கள்
முன்னதாக ஆர்ஆர்ஆர் படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதால் படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











