வெளியானது ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு வீடியோ பாடல்... மற்றொரு சிறப்பும் இருக்கு!

சென்னை : ஆர்ஆர்ஆர் படம் கடந்த மாதத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் படத்தின் சிறப்பான பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆர்ஆர்ஆர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியானது.

சுதந்திர காலகட்ட கதைக்களம்

சுதந்திர காலகட்ட கதைக்களம்

ராஜமௌலியின் முந்தைய பாகுபலி படங்கள் சரித்திர காலத்தை கதைக்களமாக கொண்டு வெளியான நிலையில், ஆர்ஆர்ஆர் படம் சுதந்திர காலக்கட்டத்தை மையமாக கொண்டு வெளியானது. இந்தப் படமும் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினர். படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக அமைந்திருந்தன. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் சமமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தனர்.

பல சாதனைகள் முறியடிப்பு

பல சாதனைகள் முறியடிப்பு

இந்நிலையில் இந்தப் படம் வெளியான சில தினங்களிலேயே இந்திய அளவில் பல படங்களின் வாழ்நாள் சாதனைகளை முறியடித்துள்ளது. ரஜினியின் 2.ஓ மற்றும் அமிர்கானின் பிகே போன்ற படங்களின் வசூலை பின்தள்ளி 1000 கோடி ரூபாயை வசூலை சிறப்பாக தாண்டியுள்ளது.

நாட்டு நாட்டு பாடல் வீடியோ

நாட்டு நாட்டு பாடல் வீடியோ

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் இந்தப் பாடல் மிகவும் ஹைலைட்டாக இருக்கும். மேலும் பாடலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். இந்தப் பாடலுக்காக திரையரங்குகளில் ரசிகர்கள் காத்திருந்து கொண்டாடினர்.

5 மொழிகளில் வெளியான பாடல்

இந்நிலையில் தற்போது இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பாடலின் நடன அசைவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்தப் பாடலை தற்போது யூடியூபிலேயே பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X