இறுதிகட்ட ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் ஆர்ஆர்ஆர் படக்குழு... வெளியானது புதிய தகவல்!

ஹைதராபாத் : ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலியின் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் இதில் கதாநாயகியாக நடிக்க, நடிகர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கொரோனாவுக்கு மத்தியிலும் பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ஆர்ஆர்ஆர் படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது.

பிரம்மாண்டமாக

பிரம்மாண்டமாக

அனைவரும் பிரமித்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட படங்களை இயக்கி வசூலை அள்ளி வரும் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகி வருகிறது. பாகுபலி இரண்டு பாகங்களும் சக்கைப்போடு போட்டு உலக அளவில் இந்திய திரைப்படங்களை உற்றுப் பார்க்க வைத்தது. பாகுபலி எந்த அளவிற்கு இந்தியாவில் வசூல் செய்ததோ அதே அளவுக்கு வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்டது.

400 கோடி

400 கோடி

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைபடத்தில் நடித்து வருகின்றனர். பாகுபலியை போலவே பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை டிவிவி தானய்யா தயாரிக்கிறது.

ஜோடியாக ஆலியா பட்

ஜோடியாக ஆலியா பட்

1920 காலக்கட்டத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான சீதா ராமராஜீ, கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக பல முறை படப்பிடிப்பு தடைபட்டு இப்பொழுது மீண்டும் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் என மொத்தமாக 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க அஜய் தேவ்கன் இதில் வில்லனாக நடிக்கிறார் மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பாடல் படப்பிடிப்பு

பாடல் படப்பிடிப்பு

அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவுக்கு சோதனையாக கொரோனா இரண்டாவது அலை பரவி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அதற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. அதில் ஒரு பாடலை உக்ரைனில் உள்ள அரண்மனையிலும், மற்றொரு பாடலை ஐரோப்பாவிலும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் மற்றும் சிலர் இடம்பெறுவதால் இன்னும் ஓரிரு வாருங்கள் படக்குழு உக்ரைனுக்கு பறக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X