‘’RRR’’ புதிய போஸ்டர்… ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளில் ரிலீஸ் !
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டர் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாள் அன்று வெளியாக உள்ளது.
பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலிஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாததே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்.
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை வரலாறு
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

ராம் சரண் , ஜூனியர் என்.டிஆர்
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோடை விடுமுறையில்
ஜனவரி மாதமே திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரொனா பரவல் காரணம் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போனது. தரசா பண்டிகையின் போது திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா 2வது தீவிரமாகி உள்ளதால் 2022 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

பிறந்த நாளில்
ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்த புகைப்படம் அவரின் பிறந்த நாள் அன்று வெளியானது. அதேபோல, ராம் சரணின் பிறந்த நாள் அன்று புதிய போஸ்டரை ராஜமௌலி வெளியிட்டார். இதே போல மே20 ந் தேதி ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாள் அன்று ஒரு புதிய போஸ்டரை இயக்குனர் ராஜமௌலி வெளியிட உள்ளார்.


Click it and Unblock the Notifications











