'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர் மகனுடன் சமந்தாவுக்கு திருமணமா? உண்மை என்ன?

சென்னை : 'ஆர்ஆர்ஆர்' பட தயாரிப்பாளரின் மகனை சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சாதாரண பெண்ணாக அறிமுகமான சமந்தா, சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப்பிடிக்க மிகவும் சிரமப்பட்டார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்த சமந்தா, நானியுடன் ஈ படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

RRR producer DVV Danayya son Kalyan to marry Samantha

நடிகை சமந்தா : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்வதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் அறிவித்துவிட்டு பிரிந்தனர்.

படங்களில் பிஸி : இதனையடுத்து சமந்தா ஆன்மிகம், சினிமாவில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். தற்போது நோய்வாய்ப் பட்டு அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, இரண்டாவது திருமணம் செய்யவும் தயாராகி வருகிறார் என செய்தி ஒன்று பரவி வருகிறது.

RRR producer DVV Danayya son Kalyan to marry Samantha

சமந்தா இரண்டாம் திருமணமா : இந்நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்பட தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் காட்டுத்தீபோல பரவியது. கல்யாணுக்கும் சமந்தாவுக்கும் மே 20 ஆம் தேதி திருமணம் என்றும், ஹைதராபாத்தில் உள்ள மாதாபூரில் உள்ள என் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறும் என்றும் கல்யாண் VS சமந்தா என்ற திருமண அழைப்பிதழும் இணையத்தில் வேகமாக பரவியது.

பரவிய வதந்தி : டோலிவுட் திரையுலக பிரபலங்கள் தனய்யாவின் மகனின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பார்கள் என்றெல்லாம் வதந்தி பரவியது. இணையத்தில் பரவிய செய்தியால் குழம்பிய நெட்டிசன்ஸ் இது வெறும் வதந்தி என தெரிந்து நிம்மதி அடைந்தனர்.

RRR producer DVV Danayya son Kalyan to marry Samantha

தயாரிப்பாளரின் மகன் : மேலும், ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளரின் மகன் கல்யாண் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிரா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். கல்யாண் நடிக்கும் ஆதிரா ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X