ராம் சரணுக்கு செம பர்த்டே கிஃப்ட்.. ஜூனியர் என்.டி.ஆர் குரலில் தெறிக்குது ஆர்.ஆர்.ஆர் இன்ட்ரோ!

சென்னை: ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தின் அட்டகாசமான அறிமுக காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Ram Charan Teja 35th Birthday | Jn NTR | RRR | SS Rajamouli

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான ராம்சரண் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.ஆர்.ஆர் படத்தில் சீதா ராமராஜுவாக நடித்துள்ள ராம்சரணின் அதிரடி இன்ட்ரோ தற்போது வெளியாகி உள்ளது.

ஜூனியரின் பரிசு

ஜூனியர் என்.டி.ஆர் குரலில் அட்டகாசமாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிரடியான ராம்சரணின் அறிமுகக் காட்சி வெளியாகி உள்ளது. காலையிலேயே இதுகுறித்த ஒரு ட்வீட்டையும் ஜூனியர் என்.டி.ஆர் போட்டிருந்த நிலையில், தற்போது, அந்த இன்ட்ரோ சீன் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

பல பிரபலங்கள்

பல பிரபலங்கள்

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் இந்தி வெர்ஷனை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு வெர்ஷனை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட, தமிழ் வெர்ஷனை ஜூனியர் என்.டி.ஆர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மோஷன் போஸ்டரையும் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில்

தமிழில்

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் ஜூனியர் என்.டி.ஆர் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளது கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் தமிழில் வெளியான மாவீரன், நான் ஈ, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் தமிழில் வெற்றி பெற்றது போல, இரத்தம் ரணம் ரெளத்திரம் படமும் வசூலை அள்ளும் என தெரிகிறது.

தெறிக்கும் வசனம்

தெறிக்கும் வசனம்

"அமைதியா நின்னா அவர் எரிகிற தணல், சீறிப்பாஞ்சா அவர் வால் நட்சத்திரம், அவர் பக்கத்துல நெருங்குனா, மரணத்துக்கு வியர்த்து ஊத்தும், பாஞ்சு வர தோட்டா எல்லாம் அவர் நில்லுனா நிக்கும், அவர் யாரு தெரியுமா? என் அண்ணன் காட்டுக்கு மன்னன், அல்லூரி சீதா ராமராஜு" என ராம்சரணுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தெறிக்கும் வசனங்களை பேசி பில்டப் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X