ஆஸ்கர் மேடையில் நாட்டு நாட்டு பாடல்... ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
சென்னை : ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலை நேரலையில் பாட உள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது.
மகதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற படங்களை இயக்கிய எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா,அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் மார்ச் 12ந் தேதி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்குகிறது.

ஆர்ஆர்ஆர்
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அல்லூரி சீதாராம ராஜூ, கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும் பீமாவாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர்.

ஆஸ்கர்
லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான ஆர்ஆர்ஆர் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.

ஆஸ்கர் மேடையில்
ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 12ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாட்டு நாட்டுப் பாடல் நேரடியாக நேரலையில் பாடப்பட உள்ளது. ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே நேரடியாக ஆஸ்கர் மேடையில் பாட உள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது. இது ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை என ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

கோல்டன் குளோப் விருது
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. அடுத்ததாக கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











