RRR பாடலுக்கு நடனமாடிய ராஜமவுலி… களைகட்டிய நைட் பார்ட்டி.
ஹைதராபாத் : எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த படம் RRR.
கடந்த மாதம் உலகெங்கிலும் ரிலீசான இந்த படம் வரலாறு காணாத ஹிட்டானது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று இரவு நடந்த சக்சஸ் மீட்டில் RRR படத்தின் ஒட்டுமொத்த டெக்னீஷியன்கள் கலந்து கொண்டனர்.

RRR Records
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான RRR திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து வசூல் வேட்டையில் இறங்கியது. ரெளீஸான இரண்டாவது வாரத்தில் உலக அளவில் 900 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் அமீர்கான் நடித்த PK மற்றும் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்த 2.O படங்களை பின்னுக்கு தள்ளிய RRR திரைப்படம் கூடிய விரைவில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நைட் பார்ட்டி
RRR படத்தின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்ட சக்சஸ் மீட்டிங்கில் RRR படக்குழு கலந்து கொண்டது. படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி படத்தின் நாயகன் ராம் சரண் மற்றும் என்டிஆர், கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். RRR படத்தை பற்றிய தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்பார்க்காத ராம்சரண்
சக்சஸ் மீட்டில் RRR படத்தின் கதாநாயகனான ராம்சரன் RRR திரைப்படத்தின் வெற்றி குறித்து ஒரு சுவாரசியத் தகவல் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். " RRR திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஆனால் உலக அளவில் நம்பர் ஒன் படமாக மாறும் என எதிர்பார்க்கவில்லை என சொல்லியுள்ளார் ". ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் இரண்டாவது படம் RRR.

ராஜமவுலி நடனம்
RRR சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட ராஜமௌலி படத்தில் வரும் Naatu Naatu பாடலுக்கு நடனமாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார். RRR ரிலீசுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் இடம் ஒரு வாக்குறுதி தந்தார். RRR படத்தின் வெற்றி விழாவில் தான் நடனம் ஆடுவதாக. அதன்படி நேற்று நடந்த சக்சஸ் மீட்டில் Naatu Naatu பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தார். அதைக் கண்ட மக்கள் கைதட்டல்கள் உடன் அதை வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











