உதவி செய்ய ஒரு மனசு வேணும்… ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு ராம்சரண் கொடுத்த சூப்பர் கிஃப்ட்!
ஆந்திரா : தெலுங்கு நடிகர் ராம்சரண் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு சூப்பரான பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்ஜிவியின் மகனான ராம் சரண் சிறுத்தை என்ற தெலுங்கு திரைப்படத்தில் தனது முதல் அறிமுகத்தை கொடுத்தார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்டது.

ஆர்.ஆர்.ஆர்.
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

ரூ. 1000 கோடி வசூல்
அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கோமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் நடித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்து இருப்பார்கள். இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 900 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த படமானது விரைவில் ரூ. 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 கிராம் தங்க நாணயம்
இந்நிலையில், நடிகர் ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இந்தப் படத்தில் பணியாற்றிய சுமார் 35 பேரை தனது ஹைதராபாத் வீட்டுக்கு அழைத்து அவர்களுடன் காலை உணவருந்தி, அவர்கள் அனைவருக்கும் 10 கிராம் மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார்.

ரூ.18 லட்சம் செலவு
அந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கம் ஆர்ஆர்ஆர் என்ற லோகோவும் மறுபக்கம் ராம் சரண் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் ரூ.18 லட்சம் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு டெக்னிஷனுடனும் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். ராம்சரணின் இந்த செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











