ரூ.1.20 கோடி மோசடி: சசிகலா உறவினரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் சித்திரை செல்வன் கைது

சினிமா தயாரிப்பாளர் சித்திரை செல்வன் ரூ. 1.20 கோடி மோசடி செய்ததாக சக தயாரிப்பாளரான பிரகாஷ் என்பவர் சென்னை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்திரை செல்வனை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை வைத்து தலைவன் என்ற படம் எடுத்தவர் சித்திரை செல்வன். பாஸ்கரன் 2 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையல் சித்திரை செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று பண மோசடி வழக்குகளில் தான் பவர்ஸ்டார் சீனிவாசனும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications