twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி!

    By Shankar
    |

    சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு.

    ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான 'மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார்.

    இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

    Rs 1 cr loss for TN distributors of Madras Cafe

    படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர்.

    தமிழகத்தில் இப்படம் வெளியிட முடியாமல் போனதால், தமிழ்நாட்டில் விநியோக உரிமையை வாங்கியவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் நிரந்தரமாக வெளியாகாதபட்சத்தில் இந்தப் படத்தின் விநியோகஸ்தருக்கு ஜான் ஆபிரகாம் இந்தத் தொகையைத் தரவேண்டியிருக்கும்.

    English summary
    The Tamil Nadu distributors of John Abhraham's Madras Cafe incurred the loss of Rs 1 cr due to not released the movie here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X