சம்பள விஷயத்திலும் ராம் சரண் தேஜா தான் பர்ஸ்ட்...: புதிய படத்துக்கு ரூ.17 கோடி

ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜா புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ரூ.17 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.

சிறுத்தா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானவர் ராம் சரண் தேஜா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்ற எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இவர், மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை பெறுவதாக கூறப்படுகிறது.

சம்பள விஷயத்தில் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாக அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையுடன் முண்ணனியில் உள்ளாராம்.

இவங்க தான் முன்னால பர்ஸ்ட்...

இவங்க தான் முன்னால பர்ஸ்ட்...

தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர் போன்றவர்கள்தான் 15 கோடி சம்பளமாக வாங்கி வந்தார்கள்.

இப்போ இவரு தான் டாப்....

இப்போ இவரு தான் டாப்....

அவர்களுக்குப் பிறகு ரொம்பவே லேட்டாக வந்தவர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. ஆனால் இன்று அவர்தான் முன்னிலையில் இருக்கிறார்.

அதிரடி வெற்றிகளே காரணம்...

அதிரடி வெற்றிகளே காரணம்...

ரட்ஷா, நாயக் படங்களின் அதிரடி வெற்றி காரணமாக ராம் சரண் தேஜாவுக்கு 17 கோடிகள் சம்பளமாக தந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

வெளிநாட்லயும் மவுசு ஜாஸ்தி...

வெளிநாட்லயும் மவுசு ஜாஸ்தி...

இவ‌ரின் படங்கள் அமெரிக்காவில் மட்டும் ஆறு கோடிக்கு மேல் வசூலாகின்றனவாம். அதேபோல் தொலைக்காட்சி உ‌ரிமையும் பல கோடிகளுக்கு விலை போகிறது. அதனால் தான் யோசிக்காமல் இப்படி அள்ளித் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

தமிழ்ல இன்னும் அதிகம்ங்க...

தமிழ்ல இன்னும் அதிகம்ங்க...

ஒரு படத்துக்கு 17 கோடியா...? என மயக்கம் போட முயற்சிக்காதீர்கள்.. ஆந்திராவில் இப்படி என்றால் தமிழில் விஜய், சூர்யா, அ‌‌‌‌ஜீத் போன்ற நடிகர்கள் இதையும்விட அதிகமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X