ரூ.17 லட்சத்தை பறிகொடுத்த பிக் பாஸ் பிரபலம்… நம்பவைத்து ஏமாற்றிய கும்பல் தலைமறைவு!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனியல்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தன்னை ஒரு கும்பல் ஏமாற்றி விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

rs 17 lakhs cheated from Bigg Boss fame actor daniel

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: நடிகர் டேனியல், விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பிரெண்டு லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல ஆப் சாப்பிட்டா கூல் ஆயுடுவாப்ல என்ற வசனத்தை பேசி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் சீசன் 2: இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இவர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து தனது காதலியான டெனிஷாவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

ரூ 17 லட்சம் போச்சு: இந்நிலையில், நடிகர் டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசடி கும்பல் ஒன்று தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். அதில், நான் நோ புரோக்கர் ஆப் மூலம் சென்னையில் வீடு வாடகைக்குத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, எஸ்.டி.எஸ்.கே பிராப் டெக் என்ற நிறுவனம் என்னை தொடர்பு கொண்டு 17 லட்சம் எங்களிடம் செலுத்தினால் வீட்டை லீசுக்கு பார்த்து தருவதாக கூறினார்கள்.

ஏமாற்றி கும்பல்: இதற்கான ஆதாரத்தையும், சென்னையில் லீசுக்கு இருக்கும் சிலரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மாதா மாதம் வீட்டு வாடகையை தாங்கள் செலுத்தி விடுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகையை திரும்பச் செலுத்தி விடுவதாகவும் கூறியதன் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு பணத்தை கொடுத்து போரூரில் வீடு ஒன்றுக்கு வாடகைக்கு சென்றேன்.

மோசடி கும்பம்: ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு வீட்டின் உரிமையாளர் வாடகை வரவில்லை என்று கூறி வீட்டை காலி செய்ய சொன்ன போது தான், நான் ஏமாற்றப்பட்டது எனக்கு தெரிந்தது பெங்களுரைச் சேர்ந்த அந்நிறுவனம் பலரை இப்படித்தான் ஏமாற்றி உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருக்கிறேன் என டேனியல் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X