சல்மானை அடித்து உதைத்தால் ரூ. 2 லட்சம் பரிசு.. விஹெச்பி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு!
சல்மான்கானை தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு அறிவித்துள்ளார் விஹெச்பி தலைவர்.
மும்பை: நடிகர் சல்மான் கானை தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என ஆக்ரா பகுதி விஹெச்பி தலைவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான், லவ்ராத்ரி எனும் பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார். சல்மான்கான் சகோதரியின் கணவர் ஆயுஷ் சர்மாவும், ஜோடியாக வாரீனா உசைனும் புதுமுகங்களாக படத்தில் அறிமுகமாகின்றனர். அக்டோபர் 5-ம் தேதி நவராத்திரி சமயத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இப்படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆக்ராவின் பகவான் டாக்கீஸ் நாற்சந்தியில் லவ்ராத்ரி படபோஸ்டரை விஹெச்பியினர் எரித்தனர்.
இந்நிலையில், நடிகர் சல்மான்கானைத் தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என வி.எச்.பி. முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா, புதிதாக ஆரம்பித்துள்ள 'ஹிந்து ஹி ஆகே' என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவுத் தலைவர் கோவிந்த் பராஷர்தான் கூறுகையில், 'இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாகவும், எனவே, சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்படும்' என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











