டைரக்டர் ஷங்கரை மிஞ்சிருவாங்க போலிருக்கே.. பிரபாஸ் படத்தின் கிராபிஸுக்கு மட்டும் இவ்வளவு கோடியா?
சென்னை: பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் பெரும் தொகையை தயாரிப்பாளர் ஒதுக்கி உள்ளார்.
Recommended Video
நடிகர் பிரபாஸ், பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது.

பூஜா ஹெக்டே
பாகுபலி-க்குப் பிறகு அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது.

ராமாயணக் காவியம்
இதையடுத்து அவர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே, அவர் ஆதிபுருஷ் நடிக்க இருக்கிறார். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆவலுடன் இருக்கிறேன்
இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கிராபிக்ஸ் காட்சி
இந்நிலையில் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரீன்மேட்டில் படத்தில் காட்சிகளை குறைந்த நாட்களில் எடுத்துவிட்டு கிராபிக்ஸ் காட்சிக்கு மட்டும் அதிகம் செலவழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹாலிவுட் நிறுவனம் ஒன்றுடன் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

அதிக செலவு
இந்தப் படத்தின் இந்தி பட்ஜெட் மட்டும் ரூ.500 கோடி என்றும் இதில் பாதியை கிராபிக்ஸுக்கு செலவழிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இயக்குனர் ஷங்கர், ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் காட்சிக்கு அதிகமாக செலவு செய்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தை லைகா தயாரித்திருந்தது. பிரபாஸின் ஆதிபுருஷ் படம் அதை மிஞ்சிவிடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











